இந்திய இராணுவ இரகசியங்களை செல்போன் மூலம் உளவுபார்க்கும் சீனா?.. இந்திய உளவுத்துறை பரபரப்பு எச்சரிக்கை.!

இந்தியாவின் வடகிழக்கு மாநில எல்லைகள் மீது கண்வைத்துள்ள சீனா, அதன் வழியாக இந்திய எல்லைகளுக்குள் ஊடுருவி தனது படைகளை நிலைநிறுத்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல, இந்தியாவின் அண்டை நாடான இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு தேவையான கடன், பொருள், ஆயுதங்கள் என அங்கும் தனக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி இந்தியாவை சுற்றிவளைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது.
சீனாவின் ராஜதந்திர நடவடிக்கைகளை இந்திய அரசு தொன்றுதொட்டு எதிர்த்து தனது செயல்பாடுகளை நிலைநிறுத்தி வருகிறது. சமீபத்தில் கடந்த சில ஆண்டுகளாக இரண்டு நாடுகளின் எல்லையில் நடந்த மோதல்களும், அங்கு இந்திய படைகள் வெற்றிகரமாக எதிர்கொண்டு சாதனைகள் புரிந்ததை இந்தியா கொண்டாடியதுமே அதற்கு சாட்சி ஆகும்.
இந்த நிலையில், இந்திய இராணுவத்தில் பணியாற்றுவோர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சீன நிறுவனங்களால் தயார் செய்யப்படும் செல்போன்களை முடிந்தளவு பயன்படுத்த வேண்டாம். அதனை தவிர்க்கும் முயற்சியில் ஈடுபடுங்கள். சீன நிறுவனங்கள் தயாரித்து வழங்கும் செல்போனில் வைரஸ் பிரச்சனை தொடருகிறது. அவை நமது வீரர்களையும், அதன் குடும்பத்தினரையும் வேவு பார்க்கலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.