அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
கள்ளக்காதலுக்கு கணவனை பலிகொடுத்த மனைவி; உறுதுணையாக மகன்கள்.. 30 ஆண்டுகளுக்கு பின் அம்பலமான உண்மை.!
30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை சம்பவம், சமீபத்தில் நடந்த வாக்குவாதத்தில் அம்பலமாகி தாய், 2 மகன்கள் வழக்கை எதிர்கொண்டுள்ளனர்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் வசித்து வருபவர் பஞ்சாபி சிங் (வயது 39). இவர் தனது தாய் மற்றும் 2 சகோதரர்கள் 30 ஆண்டுகளுக்கு முன் தந்தையை கொலை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
விசாரணையில், பஞ்சாபி சிங்குக்கு பிரதீப் குமார், முகேஷ் குமார் என 2 சகோதரர்கள் இருக்கிறார்கள். கடந்த ஜூலை 01ம் தேதி சகோதரர்களிடையே பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பிரதீப், முகேஷ் சேர்ந்து பஞ்சாபி சிங்கை மிரட்டி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: நீட் பயிற்சி வகுப்பில் கொடூரம்; மாணவியிடம் அத்துமீறல்.. பகீர் சிசிடிவி காட்சிகள்..!
சிறுவயதில் நடந்தது கண்முன் வந்தது
அப்போது, ஆத்திரத்தில் கடந்த 1994 ம் ஆண்டு தந்தையை கொலை செய்ததைப்போல, உன்னையும் கொலை செய்து அவருடன் அனுப்பி வைத்திடுவோம் என மிரட்டி இருக்கின்றனர். அப்போதுதான் பஞ்சாபி சிங்குக்கு, தான் சிறுவனாக இருந்த நேரத்தில் தனது கண்முன் நடந்தது நினைவுக்கு வந்தது.
அதாவது, பஞ்சாபி சிங் சிறுவனாக இருந்தபோது, கடந்த 1994 ம் ஆண்டு தாய் ஊர்மிளா தேவி, சகோதரர்கள் பிரதீப், முகேஷ் ஆகியோர் சேர்ந்து தந்தை புத்த சிங்கை கொலை செய்துள்ளனர். ஊர்மிளா தேவிக்கு அப்பகுதியை சேர்ந்த செல்வந்தர் ராஜவீர் சிங் என்பவருடன் நெருக்கம் ஏற்பட, அடிக்கடி இருவரும் ஊர்மிளாவின் வீட்டில் சந்தித்து வந்துள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை
இந்த தகவலை அறிந்த புத்த சிங், மனைவியை கண்டித்தும் பலனில்லை. சம்பவத்தன்று இரவில் நடந்த வாக்கு வாதத்திற்குப்பின்னர், ஊர்மிளா தேவி பஞ்சாபி சிங், இளைய சகோதரியை பக்கத்து வீட்டில் உறங்க அனுப்பி வைத்துள்ளார். பின் ஊர்மிளா தேவி தனது மகன்கள் பிரதீப், முகேஷுடன் சேர்ந்து புத்த சிங்கை கொலை செய்து வீட்டின் முற்றத்தில் புதைத்து இருக்கிறார். இதனை பஞ்சாபி சிங் நேரில் பார்த்துவிட்டாலும், இதனை வெளியே கூறக்கூடாது என மிரட்டி இருக்கின்றனர்.
பின் பஞ்சாபி சிங் அமைதிகாக்க, காலங்கள் மாறியதால் அவர் அதனை மறந்துபோனார். இதனிடையே, தற்போது சகோதரர்களுக்கு இடையே எழுந்த பணத் தகராறு மற்றும் வாக்குவாதம், ஆகியவை காரணமாக உண்மை அம்பலமாகியுள்ளது. தற்போது பஞ்சாபி சிங்கின் புகாரை ஏற்ற காவல்துறைனர், புத்த சிங்கின் உடலை வீட்டில் இருந்து தோண்டி எடுத்தனர். மேற்படி விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: கொடூரத்தின் உச்சம்.!! 13 வயது மகள் கூட்டு பாலியல் பலாத்காரம்... தந்தை, நண்பர் கைது.!!