அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் சிக்கிய அரசின் முக்கிய ஆவணங்கள்... எப்.பி.ஐ அதிரடி சோதனை..!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் சிக்கிய அரசின் முக்கிய ஆவணங்கள்... எப்.பி.ஐ அதிரடி சோதனை..!


Important government documents caught in US President Joe Biden's house... FBI action raid..

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அலுவலகம் மற்றும் அவரது வீட்டில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணங்கள் அனைத்தும் ஜோ பைடன் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்த 2009 முதல் 2016 வரையிலான ஆணவங்கள் ஆகும். அதிபர் ஜோ பைடனின் வீட்டில் இருந்து அரசின் அதிமுக்கிய ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து எப்.பி.ஐ. அதிகாரிகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். 

இந்த சோதனையில் ஏராளமான ரகசிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். சுமார் 13 மணி நேரம் இந்த சோதனை நடந்தது. அமெரிக்க அதிபர் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.