இலங்கையில் யார் பிரதமர்? தொடரும் அரசியல் குழப்பங்கள்; தலையிடும் அமெரிக்கா.

இலங்கையில் யார் பிரதமர்? தொடரும் அரசியல் குழப்பங்கள்; தலையிடும் அமெரிக்கா.



ilankai---primeminister-problem

இலங்கையில் யார் பிரதமர் பதவி வகிப்பது என்பது தொடர்பாக தொடரும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே அமெரிக்கா தலையிட்டு ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் பணிகளை செய்ய இலங்கை அரசு வழிவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா பிரதமராக பதவி வகித்த ரனில் விக்ரமசிங்கை 
அதிரடியாக நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவை நியமித்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

maithri srisana

ரணில் விக்கிரமசிங்கேவுக்கு வழங்கப்பட்ட பிரதமருக்குண்டான பாதுகாப்பையும் நீக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரணில் என்னை பிரதமர் பதவியிலிருந்து நீக்க சிறிசேனாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை நான்தான் பிரதமர் என்று ஒரு அறிவிப்பை வெளியீடு நாடாளுமன்றத்தை கூட்ட முயன்றார்.

இந்த நிலையில் மைத்ரிபாலா சிறிசேனா நாடாளுமன்றத்தை கூட்ட விடாமல் முடக்கி வருகிறார். இந்த நிலையில் சிறிசேனாவுக்கு இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு.ஜெயசூர்யா ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ராஜபக்சே நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் வரையில் ரணில் விக்ரமசிங்க தான் பிரதமராக பதவி வகிப்பார். அதுவரையில் அவருக்கு உண்டான சிறப்புரிமைகள் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

maithri srisana

இந்த குழப்பமான இலங்கை அரசின் அரசியல் சூழலில் தற்போது அமெரிக்கா தலையிட்டு பஞ்சாயத்து செய்துள்ளது. அதாவது இலங்கை நாடாளுமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என அதிபர் சிறிசேனாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. “ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களது கடமையை செய்ய இலங்கை அரசு விட வேண்டும். குழப்பமான அரசியல் சூழலால் இலங்கையில் கலவரம் ஏதும் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனவும் தெரிவித்துள்ளது.