தொடங்கியது பணிநீக்கம்..! நிதி நெருக்கடியில் ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்தது உலகின் முன்னணி ஐடி நிறுவனம்..!

தொடங்கியது பணிநீக்கம்..! நிதி நெருக்கடியில் ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்தது உலகின் முன்னணி ஐடி நிறுவனம்..!



IBM lay offs thousands employees in one day

உலகின் முன்னணி தகவல் தொழிநுட்ப நிறுவனங்களில் ஒன்றான IBM நிறுவனம் பொருளாதார நெருக்கடி மற்றும் செலவை குறைக்கும் விதமாக ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்கியுள்ளது.

கொரோனா காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளே பெரும் இழப்புகளை சந்தித்துவருகிறது. கொரோனா, கொரோனா ஊரடங்கு காரணமாக உலகளவில் பொருளாதரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக பலர் தங்கள் வேலையை இழக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

IBM

அந்த வகையில் உலகின் முன்னணி தகவல் தொழிநுட்ப நிறுவனங்களில் ஒன்றான IBM நிறுவனம் தனது ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் வேலையை தொடங்கிவிட்டது. அதன்படி, அமெரிக்காவில் இதுவரை 1000 பேரை அந்நிறுவனம் பணியில் இருந்து நீக்கியுள்ளது.

பொருளாதார நெருக்கடி, செலவை குறைத்தல், நிறுவனத்தை நிலையாக வைத்துக்கொள்ளவேண்டிய அவசியம் போன்றவற்றை காரணம் காட்டி 1000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் பணிநீக்கம் அதிமுகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.