5 வருஷ லவ்.! பேஸ்புக் லைவில் மனைவியை துடிக்க துடிக்க கொலை செய்த நபர்.! அனாதையான 8 வயது குழந்தை.

5 வருஷ லவ்.! பேஸ்புக் லைவில் மனைவியை துடிக்க துடிக்க கொலை செய்த நபர்.! அனாதையான 8 வயது குழந்தை.


Husband killed wife in Facebook live

காதலித்து திருமணம் செய்த பெண்ணை கணவனே கொடூரமாக கொலை செய்து முகநூலில் நேரடியாக ஒளிபரப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பங்களாதேஷின் பராகிப்பூர் அடுத்த பெனி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் புகியான். இவருடைய மனைவி தகிமா அக்தர். இவர்கள் இருவரும் 5 வருடங்களாக காதலித்து பின்னர் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 8 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. மகிழ்ச்சியாக சென்ற இவர்களின் வாழ்க்கையில் திடீரென சண்டைகள் ஏற்பட்ட தொடங்கியுள்ளது.

இந்நிலையில் நேற்று பேஸ்புக் லைவ் வந்த புகியான், ஒரு நபரால் தனது குடும்பத்தின் மொத்த சந்தோஷமும் போய்விட்டது, அவரால் என் குடும்பம் அழிந்துவிட்டது என கூறி, கீழே மயங்கிக்கிடந்த தனது மனைவியை பேஸ்புக் லைவில் காட்டியுள்ளார். மேலும், இரும்பு கம்பி ஒன்றை வைத்து மனைவியின் தலையில் ஓங்கி அடிக்கிறார் புகியான்.

Crime

இந்த சம்பவம் போலீசாருக்கு தெரியவர, அவர்கள் புகியான்னை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், தான் டாக்காவில் வேலை செய்து கொண்டிருந்த போது, எனது மனைவிக்கும், வேறொரு நபருக்கும் பழக்கம் ஏற்பட்டது.  இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டது.

தான் எவ்வளவு எடுத்து கூறியும் என் மனைவி அந்த உறவை கைவிடுவதாக இல்லை. அந்த சித்திரவதையை என்னால் தங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் தனது மனைவியை கொலை செய்ததாக புகியான் கூறியுள்ளார். அம்மா இறந்துவிட்ட நிலையில், தந்தையும் சிறைக்கு சென்றுள்ள நிலையில் 8 வயது குழந்தை தற்போது அனாதையாக நிற்கிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.