குறுக்கே வந்தவரை ஓங்கி அடித்த பட நடிகை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.?
படுத்தபடுக்கையான கர்ப்பிணி மனைவியின் நீண்டநாள் ஆசை!! கணவர் கொடுத்த அசத்தல் கிப்ட்!! புகைப்படங்கள் இதோ!!
படுத்தபடுக்கையான கர்ப்பிணி மனைவியின் நீண்டநாள் ஆசை!! கணவர் கொடுத்த அசத்தல் கிப்ட்!! புகைப்படங்கள் இதோ!!

அமெரிக்காவில் வசித்து வருபவர் ஜாரெட். இவரது மனைவி கெல்சி பிரேவர். கெல்சி பிரேவர் தற்போது நிறைமாத கர்ப்பமாக இருக்கிறார். மேலும் தனது கர்ப்பத்தில் அழகிய போட்டோஷூட் நடத்தவேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அவர் பலவீனமாக இருப்பதாகவும், குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படலாம் எனவே கெல்சி பிரேவர் படுத்த படுக்கையில் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கெல்சி பிரேவர் தான் கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்ளும் புகைப்படம் எடுக்க முடியாதே என்று பெரும் சோகத்தில் இருந்துள்ளார் .
இதை அறிந்த ஜாரெட், சோகத்தில் இருக்கும் தனது மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கவேண்டும் எனவும், தனது மனைவியை சந்தோஷப்படுத்தவேண்டும் என்று எண்ணி கே.எம்.ஸ்மித்தர் என்ற புகைப்படக் கலைஞரிடம் தனது மனைவிக்கு நேர்ந்தவற்றை கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து புகைப்பட கலைஞரின் உதவியுடன் ஜாரெட் தனது தொப்பையை கர்ப்பமானது போல் விதவிதமான புகைப்படங்கள் எடுத்துள்ளார். மேலும் அந்த புகைப்படங்களை கொடுத்து தனது மனைவியை மகிழ்ச்சியடைய செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.