BREAKING: ஷாக் நியூஷ்! தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரபல தமிழ் காமெடி நடிகருக்கு மாரடைப்பு!!!
கணவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி சமைத்த மனைவி! திருமணமான சில நாட்களிலே நடந்த கொடூரம்...! பின்னணியில் இருக்கும் பகீர் வாக்குமூலம்!!!
கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச்சில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம், திருமண வாழ்க்கை எவ்வளவு வேகமாக சிதற முடியும் என்பதை நினைவூட்டியது. 1991 அக்டோபரில் தொடங்கிய உறவு, ஒரு மாதத்திற்குள் ரத்தக் களமாக மாறியது. 56 வயது விமானி பில் நெல்சன் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் அவரது மனைவி ஒமைமா கைது செய்யப்பட்டார்.
தகவலின்படி, வயதான செல்வந்தர்களுடன் பழகும் பழக்கம் கொண்ட ஒமைமா, ஹண்டிங்டன் பீச்சில் உள்ள ஒரு விடுதியில் பில் நெல்சனை சந்தித்தார். சில நாட்களில் ஏற்பட்ட நெருக்கம், திருமணமாக மாறியது. ஆனால் அந்த உறவு நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. நவம்பர் 28-ஆம் தேதி இரவு நடந்த தனிப்பட்ட தருணம், கடுமையான மோதலாக மாறியது.
மோதல் இருந்து கொடூர கொலை வரை
ஒமைமாவின் வாக்குமூலப்படி, அந்த நேரத்தில் ஏற்பட்ட வன்முறை தான் தாக்குதலுக்கு காரணம் என கூறப்பட்டது. கட்டுகளிலிருந்து தப்பித்த அவர், பில்லின் தலையில் பொருட்களால் தாக்கி, பின்னர் கத்திரிக்கோலால் குத்தினார். பின்னர் நடந்தது இன்னும் அதிர்ச்சிகரமானது. அடுத்த சில மணி நேரங்களில், உடலை துண்டு துண்டாக வெட்டி, ஆதாரங்களை அழிக்க முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.
அக்கம்பக்கத்தினர் இரண்டு நாட்கள் தொடர்ந்து இயங்கிய குப்பை அகற்றும் இயந்திரத்தின் சத்தத்தால் சந்தேகம் கொண்டு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார் சோதனை நடத்தியபோது, வீடு முழுவதும் சீர்குலைந்த நிலையில் இருந்தது.
போலீசார் கண்ட அதிர்ச்சி காட்சி
சோதனையில் சமையல் பாத்திரங்கள், குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட இடங்களில் உடல் பாகங்கள் கிடைத்தன. சில பகுதிகள் முற்றிலும் காணாமல் போனதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் வெளியான தகவல்கள், அமெரிக்க குற்றவியல் வரலாற்றில் அரிதான விசித்திர வழக்கு ஆக பார்க்கப்படுகிறது.
இதையடுத்து ஒமைமா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் பரோல் கோரியபோதும், சிறையில் நடந்த வன்முறை சம்பவங்களால் அது நிராகரிக்கப்பட்டது. தற்காப்பு என்ற வாதமும், நடந்த செயல்களின் கொடூரமும் இடையே நீடிக்கும் விவாதமாக இந்த வழக்கு இன்னும் பேசப்படுகிறது.