உலகம் Covid-19

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை இப்படி தான் பேக்கிங் செய்கிறார்களா! வைரலாகும் வீடியோ!

Summary:

How corono death bodies taken safely video

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை எப்படி பாதுகாப்புடன் பேக்கிங் செய்கிறார்கள் என்பதை காட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தையும் கடந்து செல்கிறது. ஆனால் இதற்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பது மிகவும் வேதனையான ஒன்று.

இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் மருத்துவமனை ஊழியர்களே பாதுகாப்புடன் அடக்கம் செய்து வருகிறார்கள். வழக்கமான எந்தவித இறுதி சடங்குகளும் கடைபிடிக்கப்படுவதில்லை.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எவ்வாறு பாதுகாப்புடன் பேக்கிங் செய்து அடக்கம் செய்ய எடுத்து செல்லப்படுகிறது என்பதனை காட்டும் வீடியோவில், இறந்தவரின் உடல் முழுவதும் முதலில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. 

இந்த சமயத்தில் மருத்துவமனை ஊழியர்கள் உரிய பாதுகாப்பு கவசங்கள் அணிந்துள்ளனர். அடுத்து இறந்தவரின் உடலை ஒரு ப்ளாஸ்டிக் பேக்கில் வைத்து மூடிவிடுகின்றனர்.

 


Advertisement