உலகம்

ஐய்யோ குழந்தை அதை பாத்துருச்சு! 4 வயது குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த பணிப்பெண்.! என்ன காரணம் தெரியுமா?

Summary:

House main killed 4 years old child in Pakistan

பணி பெண் நகைகளை திருடுவதை பார்த்துவிட்ட 4 வயது குழந்தையை அந்தப்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பணிப்பெண் ஒருவர் வீட்டு வேலைக பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டில் இருந்த நகைகளை அப்பெண் திருட முயற்சி செய்துள்ளார்.

பணிப்பெண் நகைகளை திருடுவதை அந்த வீட்டில் இருந்த 4 வயது குழந்தை ஒன்று பார்த்துள்ளது. நகைகளை திருடியதை குழந்தை யாரிடமாவது கூறி விடும் என்ற அச்சத்தில் அந்தப் பணிப் பெண் குழந்தையை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து அந்த குழந்தையை முதலில் கழுத்தை நெரித்து பின் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி உள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த குழந்தையின் பெற்றோர் குழந்தை மயக்கமான நிலையில் கிடப்பதை பார்த்து குழந்தையை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர. 

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அருகில் இருந்த காவல் நிலையத்தில் குழந்தையின் பெற்றோர் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளனர்.

புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அப்பணி பெண்ணை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement