BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
பிணையக்கைதியாக பிடித்து செல்லப்பட்ட பெண்களிடம் அத்துமீறிய ஹமாஸ்: அம்பலமான அதிர்ச்சி உண்மை.!
கடந்த அக்டோபர் ஏழாம் தேதி தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தற்காலிகமாக தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்போது பிணையக்கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒட்டுமொத்தமாக ஒழிக்காமல் இஸ்ரேல் அமைதியாகது என அதிபர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனிய மக்கள் தற்போது உலக நாடுகளிடமிருந்து மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ மற்றும் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இஸ்ரேல் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற பெண்களில் பலரையும் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இது தொடர்பாக வீடியோ எடுத்து வைத்துள்ளதாகவும், அந்த வீடியோக்கள் பார்க்கவே கொடூரமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனால் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கி மீட்கப்பட்ட பெண்களிடம் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இஸ்ரேலின் மொசாத் உளவு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து தற்போது வரை எந்த அறிவிப்பும் இல்லை.
இதனால் மொசாத் அமைப்பை வைத்து இஸ்ரேல் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் திட்டம் என்பது ரகசியமாக இருப்பதால் பரபரப்பு அதிகரித்து இருக்கிறது.