உலகம் Covid-19

கொரோனாவை சாதகமாக்கி கொள்ளை லாபம் பார்க்கும் அமெரிக்க நிறுவனம்! விழிபிதுங்கும் மக்கள்!

Summary:

gilad charges more for corono medicine

கோரோனோ சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் எனும் மருந்தினை அமெரிக்காவின் கிலாட் நிறுவனம் பல மடங்கு அதிகமான விலைக்கு விற்பனை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா போன்ற நாடுகளில் கோரோனோ நோயாளிகளுக்கு  ஹைட்ராக்சி குளோராகுவின் என்ற மருந்து செலுத்தப்பட்டு வருகிறது. இது ஓரளவிற்கு பலன் அளிப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

கொரோனாவை கட்டுப்படுத்த மருந்து ...

அனால் தற்போது அமெரிக்காவில் அதிகமாக தயாராகும் ரெம்டெசிவிர் எனும் மருந்து மிகுந்த பலன் அளிப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்து ஏற்கனவே எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்ட போது பயன்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது இந்த மருந்தினை அதிகமாக அமெரிக்காவின் கிலாட் நிறுவனம் தயாரித்து வருகிறது. சராசரியாக 10 நாள் சிகிச்சைக்கு தேவையான இந்த மருந்தினை தயாரிக்க வெறும் 9.3 அமெரிக்க டாலர் மட்டுமே செலவு ஆகுமாம். ஆனால் தற்போது கொரோனோவிற்கான மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஒரு நோயாளிக்கு இந்த மருந்தைச் செலுத்த 10 அமெரிக்க டாலர்கள் முதல் 4,500 அமெரிக்க டாலர்கள் வரை அந்த நிறுவனம் வசூல் செய்கிறதாம். 


Advertisement