உலகம்

முன்னாள் காதலனை பேச வைக்க இப்படியொரு நாடகம் அரங்கேற்றிய பெண்.. இறுதியில் என்ன ஆனது தெரியுமா?..!

Summary:

முன்னாள் காதலனை பேச வைக்க இப்படியொரு நாடகம் அரங்கேற்றிய பெண்.. இறுதியில் என்ன ஆனது தெரியுமா?..!

ஜெர்மனி நாட்டில் உள்ள பெர்லின் நகரை சார்ந்தவர் ஜாக்குலின். இவர் ஜேக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற நபரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஜாக்குலின் - ஜேக் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் முன்னாள் காதலனுடன் பேச ஆசைப்பட்ட ஜாக்குலின், ஜேக்கை வெறுப்பேற்றுவதன் மூலமாக அதனை செய்ய திட்டமிட்டுள்ளார்.

ஜாக்குலின் தனக்கு திருமணம் ஆகிவிட்டது எனவும், அது தொடர்பான புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, அதன் வாயிலாக காதலனை பேச வைக்க திட்டம் தீட்டியுள்ளார். திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து, புதுமணப்பெண்போல ஜாக்குலின் ஆடைகள் அணிந்து, திருமண மாப்பிள்ளையாக நடிக்க ஒருவரை வாடகைக்கும் அழைத்து வந்துள்ளார். 

இவர்கள் மேற்கொண்ட திருமண விடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நிலையில், முன்னாள் காதலர் ஜேக்கும் ஜாக்குலினுக்கு திருமணம் முடிந்துவிட்டது என எண்ணியுள்ளார். ஜாக்குலினை அவர் மீண்டும் தொடர்புகொள்ளவில்லை. 

இதனையடுத்து, தன்னிலையை புரிந்துகொண்ட ஜாக்குலின், டிக் டாக்கில் தனக்கு நடந்தது போலி திருமணம், முன்னாள் காதலர் ஜேக் தன்னுடன் பேச வேண்டும் என்பதற்காக போலியான திருமணம் நடத்தி புகைப்படம் மற்றும் விடீயோக்களை பதிவு செய்ததாக தெரிவித்துள்ளார். இதனையும் கண்டுகொள்ளாத ஜேக், ஜாக்குலினிடம் பேசவில்லை. 


Advertisement