"படப்பிடிப்பின் போது ஹீரோ என்னை டார்ச்சர் செய்தார்" நித்யா மேனன் பகீர் தகவல்..
1715 கோடி இருந்தும் 1 ரூபாய் கூட எடுக்க முடியல.. ஒரே ஒரு வார்த்தையை மறந்ததால் இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்..
1715 கோடி இருந்தும் 1 ரூபாய் கூட எடுக்க முடியல.. ஒரே ஒரு வார்த்தையை மறந்ததால் இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்..

ஒரே ஒரு பாஸ்வேர்டை மறந்ததால் இளைஞர் ஒருவர் சுமார் 1715 கோடி ரூபாயை இழக்கும் சோகம் ஜெர்மனியில் நடந்துள்ளது.
ஜெர்மனியை சேர்ந்த ஸ்டீபன் தாமஸ் என்ற கம்ப்யூட்டர் புரோகிராமர் ஒருவர் பிட்காயின்களில் அதிகம் முதலீடு செய்யும் பழக்கத்தை கொண்டவர். ஒருமுறை இவருக்கு ஒரு போட்டி மூலமாக சுமார் 7002 பிட்காயின்கள் பரிசாக கிடைத்துள்ளன. அப்போது பிட்காயின்களின் மதிப்பு மிகவும் குறைவு.
இந்நிலையில் ஸ்டீபன் தனது பிட்காயின் வாலெட்டின் ரகசிய குறியீட்டை(பாஸ்வேர்ட்) அயர்ன் கீ என அழைக்கப்படும் ஒருவகை ஹார்ட் டிஸ்க்கில் சேமித்து வைத்துள்ளார். மேலும் அந்த அயர்ன் கீ என அழைக்கப்படும் அந்த ஹார்ட்டிஸ்க்கிற்கும் ஒரு ரகசிய குறியீட்டை பதிவு செய்து, அந்த ரகசிய குறியீடு மறந்துவிடாமல் இருக்க அதனை ஒரு காகிதத்தில் எழுதிவைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது பிட்காயின்களின் மதிப்பு பலமடங்கு உயர்ந்திருக்கும்நிலையில் ஸ்டீபன் வைத்திருக்கும் அந்த 7002 பிட்காயின்களின் தற்போதைய இந்திய மதிப்பு சுமார் 1715 கோடி ஆகும். தன்னிடம் 1715 கோடி மதிப்பிலான பிட்காயின் இருந்தாலும் அதில் இருந்து 1 ரூபாய் கூட எடுக்க முடியாத அளவிற்கு சிக்கலில் மாட்டியுள்ளார் ஸ்டீபன்.
ஆம், அவர் சேமித்துவைத்துல பிட்காயினைகளை விற்பனை செய்யவேண்டும் என்றால் அதற்கு அவருடைய பிட்காயின் வாலெட்டின் ரகசிய குறியீடு தேவை. ஆனால் அந்த ரகசிய குறியீட்டை சேமித்து வைத்திருந்த அயர்ன் கீ என அழைக்கப்படும் அந்த ஹார்ட்டிஸ்கின் ரகசிய குறியீட்டை மறந்துவிட்டார் ஸ்டீபன். மேலும் அந்த ரகசிய குறியீட்டை எழுதி வைத்திருந்த காகிதத்தையும் அவர் தொலைத்துவிட்டார்.
இதனால் ஹார்ட்டிஸ்கில் உள்ள வாலாட்டின் ரகசிய குறியீட்டை அவரால் தெரிந்துகொள்ளமுடியவில்லை. மேலும் 8 முறை அந்த அயர்ன் கீயின் பாஸ்வேர்டை முயற்சித்தும் அனைத்துமே தவறானது என வந்துள்ளது. 10 முறை மட்டுமே முயற்சி செய்யமுடியும் என்பதால் அவருக்கு இன்னும் 2 வாய்ப்புகள் மட்டுமே உள்ளது.
ஒருவேளை அந்த இரண்டு வாய்ப்புகளும் தவராகும்பட்சத்தில் அதில் உள்ள தகவல்களை மீண்டும் பெற முடியாது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் உள்ளார் ஸ்டீபன்.