இது எப்படி சாத்தியம்! திடீரென காரை உடைத்து கொண்டு வளர்ந்த மரம்! வைரலாகும் வீடியோ.Francs tree

உலகில் பல இடங்களில் பலவிதமான அதிசயங்களும், ஆச்சரியமான செயல்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை உடைத்து கொண்டு காரின் நடுவே மரம் வளர்ந்த அதிசய காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

அதாவது பிரான்ஸ் நாட்டில் உள்ள நன்டஸ் சிட்டில் சாலையோரம் கார் ஒன்று நிற்க வைக்கப்பட்டிருந்தது. திடிரென அந்த காரின் நடுவே ஒரு மரம் வளர்ந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

இதனை பார்த்த மக்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். மேலும் எப்படி இது சாத்தியம் எனவும் கேள்விகள் எழுப்பியுள்ளனர். மேலும் அந்த காட்சியை வீடியோ மற்றும் புகைப்படமாக எடுத்து இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.


ஆனால் அதன் பிறகு தான் தெரிந்தது அந்த காரை உடைத்து கொண்டு மரம் வளர வில்லை ராயல் டீலக்ஸ் என்ற தியேட்டரால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்ற தகவல் கிடைத்துள்ளது.