உலகம்

இறந்து போன மனைவிக்காக கதறி அழுத கணவர்.. கடைசியில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்.!

Summary:

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஜோநாதன் டாவல்-அலெக்சியா தம்பதியினர். ஜோநாதன் ஐடி நிறுவனத்த

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஜோநாதன் டாவல்-அலெக்சியா தம்பதியினர். ஜோநாதன் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜாக்கிங் சென்ற தனது மனைவி வீட்டிற்கு வரவில்லை என்று கூறி போலீசில் புகார் கொடுத்துள்ளார். 

இதனையடுத்து போலீசார் அலெக்சியாவை ஒரு அடர்ந்த காட்டு பகுதியில் இறந்த நிலையில் கண்டுப்பிடித்துள்ளனர். இறந்த தனது மனைவியை கண்டதும் ஜோநாதன் கதறித்துடித்துள்ளார்.அவரின் அழுகையை கண்டு அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். 

இந்நிலையில் ஜோநாதன் கையில் இருந்த காயத்தை போலீசார் கவனித்துள்ளனர். அக்காயம் குறித்து போலீசார், ஜோநாதனிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் மனைவியுடன் ஏற்ப்பட்ட சண்டையில் காயம் ஏற்பட்டதாக கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஜோநாதனிடம் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தியுள்ளனர். 

ஆனால் பல்வேறு பொய் காரணங்களை கூறி வந்துள்ளார் ஜோநாதன். கடந்த மூன்று ஆண்டுகள் நடைப்பெற்ற விசாரணையை அடுத்து ஜோநாதன் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது, மனைவியுடன் அடிக்கடி சண்டை ஏற்ப்பட்டு வந்ததால் மனைவி தன்னுடன் வாழ விருப்பம் இல்லை என்று முடிவெடுத்துள்ளார். 

தனது மனைவி தன்னை விட்டுப் பிரிந்து போவதை பொறுத்துக் கொள்ள முடியாத ஜோநாதன், அலெக்சியாவின் தலையை சுவற்றில் பலமுறை மோதி கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு அவரது உடலை மரங்கள் அடர்ந்த பகுதியில் போட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். 


Advertisement