கொரோனாவால் பேஸ்புக் ஊழியர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்! அதிரடி அறிவிப்பு

கொரோனாவால் பேஸ்புக் ஊழியர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்! அதிரடி அறிவிப்பு


facebook-provides-1000-dollar-bonus-to-employees-forcor

உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுவதும் 8 ஆயிரித்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய நோய் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலக அவளில் பல்வேறு ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு கேட்டுக்கொண்டுள்ளன. ஒரு சில பெரிய நிறுவனங்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Coronovirus

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரியும் 45 ஆயிரம் நேரடி ஊழியர்கள் மற்றும் இதர ஒப்பந்த ஊழியர்கள் அனைவரையும் வீட்டிலிருந்தபடியே பணிபுரியுமாறு பேஸ்புக் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் ஊழியர்களுக்கு இந்த நெருக்கடி சமயத்தில் ஊக்கமளிக்கும் வகையில் தலா 1000 டாலர் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. ஆனால் இந்த தொகையானது நேரடி ஊழியர்களுக்கு மட்டுமா அல்லது ஒப்பந்த ஊழியர்களுக்கும் வழங்கப்படுமா என்று உறுதியாக தெரியவில்லை.