பாலியல் புகாரை வாபஸ் பெற ரூ.120 கோடி இழப்பீடு கொடுக்கும் இளவரசர் ஆண்ட்ரூ.!England Prince Andrew Compromise Scandal Case Issue

இங்கிலாந்து ராணி இரண்டாவது எலிசபெத், இளவரசர் பிலிப் தம்பதியின் இளைய மகன் இளவரசர் ஆண்ட்ரு (வயது 61). கடந்த 2001 ஆம் வருடம் வர்ஜீனியா கியூப்ரே (வயது 17) என்ற பெண்மணியை இளவரசர் ஆண்ட்ரூ பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த விஷயம் தொடர்பாக பெண்ணின் தரப்பில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகர நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. 

பெண் தன் மீது சுமத்திய குற்றச்சாட்டை மறுத்து வந்த ஆண்ட்ரூ, பாலியல் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பதில் மனுதாக்கல் செய்தார். ஆனால், நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று நீதிபதி அதிரடி காண்பித்ததால், வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. 

England

இதற்குள்ளாக, ராணி இரண்டாம் எலிசபெத் அரியணை ஏறிய 70 ஆம் வருடத்தை அரச குடும்பம் கொண்டாடி வந்த நிலையில், அக்குடும்பத்துக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் பொருட்டு வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இதனை சுமூகமாக முடிக்க கூறி ராணி இளவரசருக்கு அறிவுறுத்தி இருக்கிறார். 

இந்த நிலையில், பாலியல் வழக்கை முடிவுக்கு கொண்டு வர விரும்ப இளவரசர் ஆண்ட்ரூ, வர்ஜீனியா கியூபிரிவுடன் சமரசம் செய்து, அவரின் தொண்டு நிறுவனத்திற்கு 16 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.120 கோடி) வழங்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 30 நாட்களுக்குள் வழக்கை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.