மருத்துவ பணியாளர்களின் அலட்சியத்தால் 25 வயது இளைஞர் பரிதாப பலி: மூளை கட்டியை குடல் அலர்ஜியாக பதிவு செய்ததால் சோகம்.!

மருத்துவ பணியாளர்களின் அலட்சியத்தால் 25 வயது இளைஞர் பரிதாப பலி: மூளை கட்டியை குடல் அலர்ஜியாக பதிவு செய்ததால் சோகம்.!


England London Young Man Died Brain Tumor 

 

இங்கிலாந்தில் உள்ள லண்டனைச் சார்ந்தவர் ஜோஸ்வா வார்னர் (வயது 25). இவர் கடந்த பல மாதங்களாகவே கடுமையான தலைவலி பிரச்சனையை எதிர்கொண்ட நிலையில், சமீபத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதியாகி இருக்கிறார். 

அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்திய அதிகாரிகள், குடல் அலர்ஜி பிரச்சனை இருப்பதாக தெரிவித்து, அதற்கான சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். பின் வீட்டிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

ஜோஸ்வாவுக்கு உண்மையில் மூளையில் கட்டி இருந்த நிலையில், அது தொடர்பான ஆய்வு நடந்தபோது தவறான தகவலை ஸ்கேன் இயந்திரம் வழங்கியதாக மருத்துவ பணியாளர்கள் அலட்சியப்படுத்தி இருக்கின்றனர். 

இதனைத்தொடர்ந்து ஜோசின் நிலைமையும் மோசமான சூழ்நிலைக்கு சென்றுள்ளது. இறுதியில் மூளையில் கட்டி அதிகமாகி, மரணிக்கும் தருவாயில் மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். 

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஜோஸ்வாவுக்கு மூளையில் கட்டி இருப்பதை உறுதி செய்துள்ளனர். அவரின் மறைவு குடும்பத்தினரை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ள நிலையில், மருத்துவ பணியாளர்களின் அலட்சியம் காரணமாக உயிரிழப்பு நிகழ்ந்ததாக குற்றம் சாட்டி இருக்கின்றனர்.