27 வயது இளம் நடிகையுடன் டேட்டிங் செய்யும் 50 வயது எலான் மஸ்க்..! Elon Musk Australia American Actress Natasha Bassett Dating

அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க். விண்வெளிக்கு செயற்கைகோள்களை அனுப்பும் நிறுவனத்தை வைத்து நடத்தி வரும் இவர், பலவருட சோதனைக்கு பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பெரும் சாதனை படைத்திருந்தார். விண்வெளிக்கு செல்லும் ராக்கெட்டை மீண்டும் தரையில் பத்திரமாக தரையிறங்க வைத்து உலகையே திரும்பி பார்க்க வைத்தார். 

Elon Musk

உலகின் முக்கியமான செல்வந்தர்களுள் ஒருவராக இருக்கும் இவர், தற்போது இளம் நடிகையுடன் டேட்டிங் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. எலான் மஸ்க் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டினை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க திரைப்பட நடிகை நடாஷா பாசெட் (வயது 27) ஆகியோர், எலானின் சொந்த விமானத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனியாக சந்தித்துக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Elon Musk

இருவரும் கடத்த ஒருவருடமாக நட்பு ரீதியாக பழகி வந்ததாகவும், அதன் அடிப்படையில் இருவரும் சந்தித்துக்கொண்டனர் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே எலான் மஸ்குக்கு 2 மனைவிகள் மற்றும் 5 குழந்தைகள் உள்ளனர். இருவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்றுள்ள எலான், தற்போது மீண்டும் திருமண பந்தத்தில் இணைய போகிறாரா? என்பதற்கு காலம் பதில் சொல்லும் என தெரியவருகிறது.