காரின் மீது ஒய்யாரமாக ஏறி அமர்ந்த யானை.! மரண பீதியுடன் போராடிய பயணிகள்!! வைரலாகும் பகீர் வீடியோ !!

elephant sat on car video viral


elephant sat on car video viral

தாய்லாந்தில் அமைந்துள்ள தேசிய பூங்கா ஒன்றில்  சுற்றுலாப் பயணிகள் காரில் சென்றுள்ளனர. அப்போது அப்பகுதியில் சுற்றி திரிந்த யானை ஒன்று சுற்றுலாப்பயணிகளின் காரின் முன்பு நின்று வழிமறித்து உள்ளது. 

இந்நிலையில் அச்சத்தில் மூழ்கிய சுற்றுலா பயணிகள் காரை நிறுத்தி,  யானைகளின் செய்கைகளை கவனித்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது யானை முதலில் தனது தும்பிக்கையால் காரின் முன்பக்கத்தை லேசாக தட்டுகிறது. பின்னர் சிறிது நகர்ந்து தனது உடம்பால் கார் மீது சாய்ந்து நிற்கிறது.

car

அதனைத் தொடர்ந்து தனது இரு முன்னங்கால்களையும் காரின் ஒரு பக்கத்திலிருந்து மெதுவாக மறுபக்கத்திற்கு கொண்டு சென்று அப்படியே காரின் மீது மெதுவாக அமர துவங்கியுள்ளது. இந்நிலையில் சற்று சுதாரித்துக் கொண்ட காரில் வந்த பயணிகள் மெதுவாக காரை நகர்த்தியுள்ளனர். பின்னர் யானையிடம் இருந்து முழுவதுமாக விடுபட்ட நிலையில் வேகமாக காரை ஓட்டி அங்கிருந்து தப்பியுள்ளனர்.

 மேலும் கார் யானை அமர்ந்த நிலையில் பின்பக்கம் மிகவும் அமுங்கி நொறுங்கி காணப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் மின்னல் வேகத்தில் வைரலாகி வருகிறது.