ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
தறிகெட்ட பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. உடல் நசுங்கி 18 பேர் பரிதாப மரணம்.!
ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்த பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 18 பயணிகள் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
தென்னமெரிக்க நாட்டில் ஒன்றாக உள்ள ஈகுவடார் நாட்டின், தெற்கு பகுதியில் அமைந்துள்ளது மேரோனா சாண்டியாகோ மாகாணம். இம்மாகாணத்தின் சுகுவோ நகரில் இருந்து பேருந்து புறப்பட்டு சென்றுள்ளது. பேருந்தில், 40 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர்.
இந்த பேருந்து, ஹீவாம்பி நகரில் இருக்கும் மக்காஸ் - லோஜா நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் பயணித்துக்கொண்டு இருக்கையில், சற்றும் எதிர்பாராத வகையில் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்துள்ளது.
சாலையில் தறிகெட்டு இயங்கிய பேருந்தால், பேருந்தில் பயணித்த அனைவரும் மரண ஓலமிட்டுள்ளனர். பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை நிறுத்த பல முயற்சிகள் மேற்கொண்டும் தோல்வியில் முடிந்து, பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து இருக்கிறது.
சக வாகன ஓட்டிகள் மீட்பு பணியில் ஈடுபட, இந்த தகவலை அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரும் மீட்புப்பணிகளில் ஈடுபட தொடங்கினர். இந்த விபத்தில், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தவாறு பிணமாக மீட்கப்பட்டனர்.
25 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு, அவசர ஊர்திகளின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமான வகையில் உள்ளது. இதனால் பலி எண்ணிக்கையும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.