மூன்று கார் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து; இரண்டு பேர் பரிதாப பலி.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

மூன்று கார் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து; இரண்டு பேர் பரிதாப பலி.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!


dubai-accident-court-jugement

 

துபாயில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கார் ஓட்டி சென்றுள்ளார்.அப்பொழுது, அந்த காரை பின்னோக்கி நகர்த்தி உள்ளார். அதே நேரம் இந்திய நாட்டைச் சேர்ந்த ஒருவர் கார் பின்னோக்கி வருவதை கவனிக்காமல், இவருடைய காரை ஓட்டிச் சென்றுள்ளார். 

இதனால் இந்த இரண்டு கார்களும் ஒன்றோடு ஒன்று இடித்து கொண்டதோடு மட்டுமல்லாமல், இந்த இரண்டு கார்களும் சேர்ந்து மற்றொரு கார் மீது மோதி, அந்த கார் பலத்த சேதம் அடைந்தது. அந்த காரின் உள்ளே 6 பேர் இருந்துள்ளனர்.

Dubai

அவர்களில் 4 பேர் படுகாயத்துடனும், 2 பெண்கள் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இது பற்றி துபாய் போக்குவரத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில் வங்கதேசத்தைச் சேர்ந்தவரும், இந்திய நாட்டைச் சேர்ந்தவரும் விபத்து ஏற்படுத்தியதற்காக துபாய் நீதிமன்றம் ₹90 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் இந்திய நாட்டை சேர்ந்தவருக்கு 18 லட்சம் அபராதமும் செலுத்த வேண்டும் என்று  நீதிமன்றம் கூறியுள்ளது.