உலகம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் சென்ற விமானத்தின் மீது மோதிய ட்ரோன்!

Summary:

drone crashes into trumps flight

நேற்று முன்தினம் ஆகஸ்ட் 16 ஆம் தேதியன்று அன்று வாஷிங்டனில் அதிபர் ட்ரம்ப்பின் விமானம் பறந்து கொண்டிருந்த போது, சிறிய ட்ரோன் மோதியதாக கூறப்படுகிறது. கருப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருத்த அந்த சிறிய ட்ரோன் கிராஸ் வடிவில் இருந்ததாகவும் அதை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட அந்த விமானத்தின் மீது ட்ரோன் மோதியது தொடர்பாக ரகசிய விசாரணை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த விசாரணையை அமெரிக்க உளவுத்துறையும், வான் பாதுகாப்பு பிரச்சனைகளை ஒருங்கிணைக்கும் வாடா மெரிக்கா விண்வெளி பாதுகாப்பு அமைப்பும் முன்னெடுத்து நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Advertisement