ஆம்புலன்ஸ் பின்னாலையே ஓடிய நாய்.. மருத்துவமனைக்கு சென்றும் விடுவதா இல்லை.. வாசலிலையே காத்திருந்த நாய்..

தன்னை வளர்த்த உருமையாளருக்காக நாய் ஒன்று 6 நாள் மருத்துவமனை வாசலில் காத்திருந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி நாட்டின் வடகிழக்கில் அமைந்திருக்கும் டிராப்ஜன் நகரில் வசித்து வருபவர் சிமல் சென்டர்க். 68 வயதான இவர் போன்கக் என்ற நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். நாயுடன் மிகுந்த பாசமாக இருந்துவந்த சிமல் திடீரென உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் வாகனம் வந்துள்ளது.
இதனை அடுத்து சிமல் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்வதை பார்த்த அவரது நாய் போன்கக், ஆம்புலன்ஸ் வாகனத்தின் பின்னாலையே ஓடியுள்ளது. மேலும் சிமல் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் வாசலில் தொடர்ந்து ஆறுநாட்கள் அந்த நாய் தனது உரிமையாளரின் வருகைக்காக காத்திருந்துள்ளது.
நாயின் பாசத்தை பார்த்த சிமலின் மகள், நாயை வீட்டிற்கு தூக்கி சென்றுள்ளார். ஆனாலும் அந்த நாய் மீண்டும் மருத்துவமனைக்கே ஓடிவந்துள்ளது. இறுதியில் 6 நாள் கழித்து சிமல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெளியே வருவதை பார்த்த நாய் போன்கக், அவரை பார்த்ததும் தனது வாழை ஆடி, துள்ளி குதித்து தனது பாசத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த சிமல் சென்டர்க் மனிதர்களை போன்று எங்களுடன் இது நெருக்கமாக உள்ளது. என நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார்.