உலகம்

என்னது, நாய்க்கு டாக்டர் பட்டமா? பெருமைப்படுத்திய பிரபல பல்கலைக்கழகம்! அப்படி அந்த நாய் என்ன படித்தது தெரியுமா?

Summary:

doctor award given to dog by american university

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள கிளார்க்ஸன் பல்கலைக்கழகத்தில் பிரிட்னி ஹாலே என்ற பெண் உளவியல் தொடர்பு சிகிச்சை பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். அவருக்கு முதுகுத்தண்டுவடப் பிரச்சினை உள்ளது. அதனால் அவரால் எழுந்து நடக்க இயலாது.

எனவே, அவர் வளர்த்து வந்த கிரிஃபின் என்ற நாய்க்குதான் சொல்வதை கேட்பது போல் வளர்த்து வந்தார். அதன்படி காலை பிரிட்னியின் சக்கர நாற்காலியை தள்ளிச் செல்லுதல், வீட்டு வாயில் கதவைத் திறந்துவிடுதல், பிரிட்னியின் செல்போன், புத்தகத்தை எடுத்து வருதல் என அனைத்து பணிகளையும் செய்து வந்துள்ளது. 

அதுமட்டுமின்றி பல்கலைக்கழகத்துக்கு பிரிட்னி வரும்போது அவரைப் பாதுகாப்பாக அழைத்து வருதல், அழைத்துச் செல்லுதல் போன்ற பணிகளையும் கிரிஃபின் மிக சிறப்பாக செய்து வந்துள்ளது.

இதனை பாராட்டும் வகையில் நியூயார்க்கில் உள்ள பாட்ஸ்டாம் அறக்கட்டளை சார்பில் க்ரிபினுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப் பரிந்துரைக்கப்பட்டு  கிளார்க்ஸன் பல்கலைகழகம் அந்த நாய்க்கு கவுரவப் பட்டம் வழங்கி பெருமைபடுத்தியுள்ளது.


Advertisement