ஆண்டி முரே ஓய்வு; ஆஸ். ஓபன் டென்னிஸில் ஏற்பட்ட தோல்வி தான் காரணமா?dennis player - aunty mura - england

உலகப் புகழ்பெற்ற இங்கிலாந்தின் முன்னணி வீரர் ஆண்டி முரே ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஏற்பட்ட தோல்வி தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்டி முரே முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவினார். அந்த ஆட்டத்தில் அவர், ரோபார்ட்டோ பேடிஸ்டாவிடம் எதிர்த்து விளையாடி 6-4, 6-4, 6-7 (5-7), 6-7 (4-7), 6-2 எனப் போராடித் தோற்றார்.

இத்தோல்விக்குப் பிறகு இனி தான் டென்னிஸ் போட்டிகளில் விளையாட முடியாமல் போகலாம் என்று ஆண்டி முரே கூறியுள்ளார்.

dennis

ஆண்டி முரேவின் இந்த திடீர் ஓய்வு குறித்த பேச்சைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீரர்கள் பிரியாவிடை அளித்துள்ளனர். ரோஜர் பெடரர், ரபேல் நடால், நோவோக் ஜோக்கோவிச் உள்ளிட்ட பலர் அவரது முரேயின் சாதனைகளைப் பாராட்டி வாழ்த்து கூறியுள்ளனர்.

இதையடுத்து பேட்டி அளித்த அவர், “இதுவே என்னுடைய கடைசி போட்டியா இருக்கலாம். இனிமேல் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பேனா என்று தெரியவில்லை. ஆனால் நான் முயற்சிக்கிறேன். பெரிய ஆபரேஷன் ஒன்று இருக்கிறது. அதற்குப் பின் மீண்டும் விளையாட்டுக்குத் திரும்பவது பற்றி உத்திரவாதம் இல்லை.” என்று தெரிவித்தார்.