மியாமியில் பயங்கரம்... பெண் மேனேஜருக்கு கத்தி குத்து.!! 83 வயது தாத்தா வெறி செயல்.!!
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலம் மியாமி கடற்கரையில் 83 வயது முதியவர் ஒருவர் மேலாளர் பெண்ணை பலமுறை கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் ஆகஸ்ட் 4ம் தேதி காலை 11 மணியளவில் நடந்துள்ளது. அந்த குடியிருப்பின் பத்தாவது மாடியில் வசிக்கும் குலாவும், அவரது காதலி ரோசிண்டா அரேல்லானாவும், மேலாளர் ஆர்டிஸுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே கோபமடைந்த குலா திடீரென கத்தியை எடுத்து அந்த மேலாளர் பெண்ணின் மார்பிலும் தலையிலும் பலமுறை குத்தியுள்ளார். அவரை தடுத்து நிறுத்திய போதிலும் கோபம் குறையாமல் மீண்டும் கத்தியால் அந்த பெண்ணை தாக்க முயன்றார். அப்போது குலாவின் காதலி இடையில் வந்து தடுத்ததால் அவர் அமைதியடைந்தார்.

இந்தச் சம்பவம் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து குலா அவரது காதலியின் குடியிருப்புக்குள் மறைந்திருந்துள்ளார். பின்னர் தகவலறிந்து வந்த போலீசார் குலாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இந்த கொடூர சம்பவம் பதிவாகிய சிசிடிவியின் கண்காணிப்பு காட்சி மற்றும் தாக்குதலில் ஏற்பட்ட ரத்தக்கரை ஆகியவை அனைத்தும் குலாவிற்கு எதிரான குற்றத்தை மேலும் வலுப்படுத்தும் சாட்சியாக அமைகிறது.
இதனால் அவர் ஃப்ளோரிடாவின் டோரலில் உள்ள மெட்ரோ வெஸ்ட் தடுப்பு மையத்தில் ஜாமீனின்றி தவித்து வருகிறார். இந்த சம்பவம் ஃப்ளோரிடா மாகாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "வயதில் மூத்த பெண்ணுடன் கள்ளக்காதல்..." நிதி நிறுவன ஊழியரின் விபரீத செயல்.!! போலீஸ் நடவடிக்கை.!!