நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
"வயதில் மூத்த பெண்ணுடன் கள்ளக்காதல்..." நிதி நிறுவன ஊழியரின் விபரீத செயல்.!! போலீஸ் நடவடிக்கை.!!
தன்னுடன் கள்ளத்தொடர்பிலிருந்த பெண் விலகிச் சென்றதால் ஆத்திரத்தில், அந்த பெண்ணை கத்தியால் குத்திய நிதி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் மத்திய சிறையிலடைத்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள விருகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். 29 வயதான இவர் அப்பகுதியிலுள்ள நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 33 வயது பெண்ணுடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஜெயபிரகாஷின் காதலி தனது கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் அந்தப் பெண் திடீரென ஜெயப்பிரகாஷுடன் பழகுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஜெயப்பிரகாஷ் அந்த பெண் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்ற ஜெயபிரகாஷ் மீண்டும் தன்னுடன் பழகுமாறு அந்த பெண்ணை வற்புறுத்தியிருக்கிறார். இது தொடர்பாக இருவரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியிருக்கிறார் ஜெயப்பிரகாஷ். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: "பஸ் பயணத்தில் கள்ளக்காதல்..." வீடியோ எடுத்து மிரட்டிய கண்டக்டர்.!! போலீஸ் நடவடிக்கை.!!
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பெண்ணை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட ஜெயப்பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: "மாமியார் வீட்டில் உல்லாசம்..." மகள், காதலனை தீர்த்து கட்டிய தந்தை.!!