அடப்பாவமே...90ஸ் கிட்ஸ்க்கு வந்த சோதனை...70 வயது முதியவரை மணந்த 19 வயது இளம் பெண்..!

அடப்பாவமே...90ஸ் கிட்ஸ்க்கு வந்த சோதனை...70 வயது முதியவரை மணந்த 19 வயது இளம் பெண்..!


damn-ita-test-for-90s-kidsa-19-year-old-girl-who-marrie

நம் வாழ்வில் ஒருமுறை விழுவதற்காக மகிழ்ச்சி அடைகிறோம் என்றால் அது காதலில் விழுவதற்காக மட்டுமே. காதல் என்பது வாழ்க்கை முழுவதும் நாம் பரிமாற வேண்டிய உன்னதமான உணர்வு. காதற்கண் கொண்டு பார்த்தால் காக்கை கூட காணமயிலாகத்தான் தெரியுமாம். காதலுக்கு ஜாதி, மதம், வயதுவரம்பு தேவையில்லை என்பார்கள் காதலில் விழுந்தவர்கள்.

அப்படி ஒரு நிகழ்வு தான் பாகிஸ்தானில் லாகூர் நகரில் நிகழ்ந்துள்ளது. லாகூர் நகரை சேர்ந்தவர் லியாகத் அலி இவருக்கு வயது 70. அதே பகுதியை சேர்ந்தவர் சுமைலா அலி இவருக்கு வயது 19. சுமைலா அலி பாடல் பாடுவதில் சிறந்தவர் என்று கூறப்படுகிறது. இதனால் இவரது பாடலில் மயங்கிய லியாகத் அலி சுமைலாவின் மீது காதலில் விழுந்ததாக சொல்லப்படுகிறது.

love marriage

 இதனைத் தொடர்ந்து இருவரும் காதல் வயப்பட்டு சமீபத்தில் திருமணம் செய்துள்ளனர். இவர்களது திருமணம் குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.