திடீரென உடைந்த அணையால் 58 பேர் பலி, பலர் மாயம்; பலி எண்ணிக்கை உயரும் அபாயம்.!

திடீரென உடைந்த அணையால் 58 பேர் பலி, பலர் மாயம்; பலி எண்ணிக்கை உயரும் அபாயம்.!


dam-demage-in-brasil--9-death---300-person-questin-mark

பிரேசில் நாட்டில் திடீரென உடைந்து விழுந்த அணையால் வெளியேறிய சேற்றில் சிக்கி 58 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பல பேர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிரேசில் நாட்டில் நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத பழமையான அணை ஒன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த அணையானது மினாஸ் கிரியாஸ் மாகாணத்தில் பெலோ ஹரிசான்டோ நகரில் அமைந்துள்ளது. இந்த அணைக்கு அருகே வேல் என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இரும்புத் தாது சுரங்கம் அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறிய கழிவுநீர் அந்த அணையில் கலந்து சேரும் சகதியுமாக நீண்ட நாட்களாக இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளி கிழமை அன்று அணை உடைந்தால் அருகே இருந்த நிறுவனத்தில் சேரும் சகதியும் பாய்ந்துள்ளது.

brasil 

இதனால் சுரங்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த சுமார் 400க்கும் மேற்பட்ட பணியாளர்களில் 58 பேர் பலியாகியுள்ளனர். 148 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் மேலும் பல பணியாளர்களை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளதாக அந்நாட்டு மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இனி மீட்கப்படுவர்கள் பெரும்பாலும் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என்று மினாஸ் கிரியாஸ் மாகாண ஆளுநர் ரோமியோ ஷிமா தெரிவித்துள்ளார்.