உலகம் லைப் ஸ்டைல்

எடை மிக அதிகமாக இருந்த காய்கறிக்கூடை...! திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Summary:

Couples hide 10 years old boy in veg basket

கடந்த திங்கட்கிழமை அன்று மொராக்கோவை சேர்ந்த இளம் தம்பதியினர், வட ஆப்பிரிக்காவின் ஸ்பெயின் நகரமான மெலிலாவில் இருந்து பெனி-என்சார் எல்லையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது அவர்கள் வைத்திருந்த காய்கறி கூடையின் எடை அதிகமாக இருப்பதை பார்த்த அதிகாரிகள் கூடையை சோதனை செய்துள்ளன்னர்.

காய்கறி கூடைக்குள் 10 வயது சிறுவன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் இதுகுறித்து அந்த தம்பதியினரிடம் விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் மெலிலியாவில் உள்ள தற்காலிக குடியிருப்பில் இருந்து தங்கள் மகனை ஐரோப்பாவிற்கு எல்லையை கடந்துசெல்ல உதவுமாறு அந்த சிறுவனின் தாய் அந்த தம்பதியினரிடம் கேட்டுக்கொண்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், இதற்காக அந்த சிறுவனின் தாய் இந்த தம்பதியினருக்கு சிறிது பணம் கொடுத்ததும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அந்த சிறுவனை அவனது தாயிடம் ஒப்படைத்த போலீசார் கடத்தல் வழக்கில் அந்த தம்பதியினரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Advertisement