பெயர் மாறியது கொரோனா வைரஸ்..! இனி இப்படித்தான் அழைக்கவேண்டும்..! புது பெயர் என்ன தெரியுமா.? - TamilSpark
TamilSpark Logo
உலகம் மருத்துவம் லைப் ஸ்டைல்

பெயர் மாறியது கொரோனா வைரஸ்..! இனி இப்படித்தான் அழைக்கவேண்டும்..! புது பெயர் என்ன தெரியுமா.?

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை பலர் உயிர் இழந்துள்ளனர். சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக கருதப்படும் இந்த வைரஸ் தற்போது வெவ்வேறு நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக எங்கு பார்த்தாலும் கொரோனா கொரோனா என மக்கள் கூறி வந்த நிலையில் தற்போது இந்த வைரஸ் தாக்குதலுக்கு புது பெயரை வைத்துள்ளது உலக சுகாதார நிறுவனம் (WHO). தற்போதுவரை வழக்கில் இருந்த கொரோனா என்பது குறிப்பிட்ட வகை வைரஸ்களின் தொகுப்பாகும்.

இந்த தொகுப்பில் இருக்கும் ஒரு வைரஸ்தான் தற்போது சீனாவில் பரவி உயிர் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த குறிப்பிட்ட வைரஸுக்கு COVID-19 என பெயர் வைத்துள்ளனர்  உயிரியல் வல்லுனர்கள்.

COVID - 19 என்றால் கொரோனாவில் உள்ள CO, வைரஸில் உள்ள VI, நோய் (disease) உள்ள D ஆகிய முதல் எழுத்துக்களை சேர்த்து COVID  என்றும், நோய் பரவிய ஆண்டான 2019 ஐ குறிப்பிடும் வகையில் COVID-19  என்றும் இந்த வைரஸுக்கு பெயர் வைத்துள்ளனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo