புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
சிங்கப்பூரையும் அச்சுறுத்த துவங்கிய கொரோனா வைரஸ்! ஆரஞ்சு அலர்ட் விடுத்து தீவிர கண்காணிப்பு!
சீனாவில் இருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் இந்த வைரஸால் ஆயிரத்திற்கும் மேலானோர் பலியாகிவிட்டனர்.
சிங்கப்பூரில் இருந்து சீனாவிற்கு சென்று வந்தவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களுக்கு ஆரம்பத்தில் கொரோனா அறிகுறி இருந்ததால் முதலில் மஞ்சள் அலார்ட் விட்டுக்கப்பட்டது. தற்போது அவர்களோடு தொடர்பில் இல்லாதவர்களுக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதால் ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அலார்ட் மூலம் சுகாதார மையங்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்படுகிறது. அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் எந்தவித பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தபப்டுகிறது.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் தனியாக வைக்கப்பட்டு தீவி கண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியல்கள் தயார் செய்யப்பட்டு அவர்களும் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.