கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடித்தது அமெரிக்கா..! இன்று முதல் பரிசோதனை.!

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 6000 கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரசுக்கு அவசர தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளதாகவும், அந்த தடுப்பூசியை இன்று பரிசோதனை செய்ய இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில் 45 இளம், ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்கு இந்த மருந்தை பரிசோதனை செய்ய இருப்பதாகவும், அதில் முதல் நபருக்கு இந்த தடுப்பூசி போடப்பட இருப்பதாகவும் அந்நாட்டு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த தடுப்பூசியில் எந்த ஒரு வைரசும் இல்லை என்பதால், கட்டாயம் இந்த தடுப்பூசியால் எந்த ஒரு பக்கவிளைவுகளும் வராது எனவும் கூறப்படுகிறது. உலகமே கொரோனா வைரஸுக்கு மருந்ததை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அமெரிக்காவின் இந்த முயற்சி வெற்றிபெற்றால் உலகமே நிம்மதி பெருமூச்சு விடும் என்பது மட்டும் உறுதி.