குவியும் சடலங்கள்.! அடக்கம் செய்யமுடியாமல் அழுகி துர்நாற்றம் வீசும் சடலங்கள்.! திணறும் அமெரிக்கா.!

குவியும் சடலங்கள்.! அடக்கம் செய்யமுடியாமல் அழுகி துர்நாற்றம் வீசும் சடலங்கள்.! திணறும் அமெரிக்கா.!



Corono latest updates USA

கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய தாமதமாகும் நிலையியல், குளிர்சாதன பெட்டிகள் செயலிழந்ததால் உடல்கள் அழுகி துர்நாற்றம் வீசும் சம்பவம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸால் உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா பெரிய அளவில் பாதிப்புகளை சந்தித்துள்ளது. அமெரிக்காவால் இதுவரை 1,160,996 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 67,448 பேர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். மேலும், தினம் தினம் அதிகரிக்கும் இறப்புகளால் அந்நாட்டு பெரும் சோகத்தை சந்தித்துவருகிறது.

corono

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் அமைந்துள்ள ப்ரூக்ளின் பகுதியில் கொரோனா வைரஸால் உயிர் இழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் இடத்தில் நின்றுகொண்டிருந்த 4 பெரிய வாகனங்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வாகனங்களை சோதனை செய்ததில் 12 சடலங்கள் வாகனத்தில் இருந்ததும், சடலங்கள் அழுகிய நிலையில் அதில் இருந்து துர்நாற்றம் வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து நடந்த விசாரணையில், உடல்களை அடக்கம் செய்யமுடியாததால் குளிர் சாதன பெட்டிகளில் வைத்து பராமரித்ததாகவும், குளிர் சாதன பெட்டிகள் செயலிழந்ததால் சடலங்கள் அழுகி துர்நாற்றம் வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.