சாலையில் சரிந்துவிழும் மக்கள்..! ரோட்டில் கிடக்கும் சடலங்கள்..! நகரும் படிக்கட்டுகளில் மனித உடல்கள்..! எந்த நாட்டில் தெரியுமா..?
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளிலும் இதன் தாக்கம் பெருமளவில் உள்ளது.
குறிப்பாக ஈரான் நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ளது. ஈரானில் கட்டுக்கடங்காமல் பரவிவரும் கொரோனா தொற்றினால் சாலை ஓரங்கள், ஷாப்பிங் மால்கள் என மக்கள் இறந்து கிடைக்கும் காட்சிகள் பார்ப்போரை பதறவைக்கிறது.
ஈரான் நாட்டில் கொரோனா தொற்றினால் இதுவரை 1, 46,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 7600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஈரான் மக்கள் சாலை ஓரங்களில் கொரோனா காரணமாக மூச்சிரைப்புக்கு உள்ளாகி சிரமப்படும் சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையியல் மக்கள் சாலை ஓரங்கள், ஷாப்பிங் மால்களில் உள்ள நகரும் படிக்கட்டுகள் போன்றவற்றில் மூச்சிரைப்பு காரணமாக நின்றபடி இறந்து விழும் காட்சிகள் பார்ப்போரை நடுங்கவைக்கிறது.