
Coronavid19 bangalore
சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இதுவரை இந்நோயால் 4000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் இந்நோயை தடுக்க எந்த விதமான தடுப்பு மருந்துகளும் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது இந்நோயானது இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 50க்கும் மேற்ப்பட்ட மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயால் நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது பெங்களூரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனை அடுத்து தற்போது அந்த ஊழியர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
எனவே, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு அலுவலகத்தில் உள்ள ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement