ஒரே நாளில் 64 பேர் பலி! 6000 பேருக்கு பாதிப்பு! கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம்!
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 425 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 64 பேர் உயிரிழந்துள்ளதால் சீன மக்கள் பீதியில் உள்ளனர்.
கொரோனா வைரஸ் அச்சம் உலகம் முழுக்க பரவி வருகிறது. சீனாவில் வுஹான் நகரத்தில் தோன்றிய இந்த வைரஸ் ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவ கூடியது. கொரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி உலகம் முழுக்க மொத்தம் 23 நாடுகளில் பரவி இருக்கிறது. இதனால் உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த கொடூர வைரஸான கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்தது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் நேற்று மட்டும் புதிதாக இந்த வைரஸ் தாக்குதலால் 6000 பேர் பாதிப்பு அடைந்தனர். இந்த வைரஸ் உருவான பின் ஒரே நாளில் இத்தனை பேர் மொத்தமாக பலியாவது இதுவே முதல்முறையாகும்.
இதுகுறித்து சீனா அரசாங்கங்கம் கூறுகையில், ‘சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலினால் பலியானோர் எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 64 பேர் பலியாகினர். அவர்கள் அனைவரும் ஹுபேய் மாகாணத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதுவரை மொத்தம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என தெரிவித்துள்ளது.