காவல்நிலையத்தில் பரபரப்பு, நடுங்கிய நிலையில் அணில் மீது புகார், விரைந்த போலீசார்.!

காவல்நிலையத்தில் பரபரப்பு, நடுங்கிய நிலையில் அணில் மீது புகார், விரைந்த போலீசார்.!


complaint-on-baby-squirrel-in-germany-ULU8DU

ஜெர்மனியில் கார்ல்ஸ்ரூஹே என்ற நகரில் காவல் துறையினருக்கு ஒரு  போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் நடுங்கிய குரலில் தன்னை அணில் குட்டி ஒன்று துரத்துகிறது என அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.அங்கு இளைஞரை அணில் குட்டி ஒன்று வேகமாக துரத்தியது.  சிறிது நேரத்தில் அந்த அணில் குட்டி, சோர்வடைந்து துரத்துவதை விட்டுவிட்டு படுத்தது.

அந்த அணில் குட்டியை காவல் துறையினர் மீட்டு தத்தெடுத்து உள்ளனர்.  அதற்கு கார்ல் என பெயரும் இட்டு, அது விலங்கு மையம் ஒன்றில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி காவல் துறையை சேர்ந்த கிறிஸ்டினா கிரென்ஜ் கூறும்பொழுது, தங்களது தாயாரிடம் இருந்து பிரிந்து விடும் அணில் குட்டிகள் மற்ற நபரின் மீது தனது கவனத்தினை செலுத்தி அவர்கள் பின்னாலேயே செல்லும் என கூறியுள்ளார்.

ஒரு சிறு அணில் குட்டி துரத்தியதற்கு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் வைரலாக பரவி வருகிறது.