கொரோனா வைரஸால் சீனர்களை பிற நாட்டிற்குள் நுழைய தடை!

சீனாவின் வுகான் நகர மருத்துவமனையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது தெரியவந்தது. இந்த கொடூர வைரஸால் பாதிக்கப்பட்டு நாளுக்கு நாள் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
கொரோனா வைரஸ்க்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் நோயை கட்டுப்படுத்த சீன அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அதற்காக தற்காலிகமாக மருத்துவமனைகளும் கட்டப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 636 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. நேற்று மட்டும் 69 பேர் உயிரிழந்ததாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரை 30,000 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா வைரஸால் சர்வதேச சுகாதார நிறுவனங்கள் தரப்பில், ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனம் மூலமாகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் உலக நாடுகள் அனைத்தும், சீனர்களை தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதித்து வருகின்றன.