புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
கணவன் - மனைவி சண்டையில் 23 வது மாடி ஏசி யூனிட்டில் உட்கார்ந்த குழந்தைகள்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
தம்பதிகளுக்குள் நடந்த வாக்குவாதம் காரணமாக, குழந்தைகள் ஆபத்தான இடத்தில் அமர வைக்கப்பட்டனர்.
சீனாவில் வசித்து வரும் தம்பதிகள், தங்களுக்கு இடையே சம்பவத்தன்று வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது, தம்பதிகளின் 2 குழந்தைகள் வீட்டின் பக்கவாட்டு பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த ஏசி அவுட்டோர் யூனிட் மீது அமர வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: தடம்புரண்ட சரக்கு இரயில்.. டிவி உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை களவாடிய மக்கள்..!
குழந்தையை நெருங்கக்கூடாது என தாய் பகீர் செயல்
அதாவது, கட்டிடத்தின் 23 வது தலத்தில் தம்பதிகள் வசித்து வந்த நிலையில், 23 வது மாடியில் குழந்தைகள் ஆபத்தான நிலையில் உட்கார்ந்து இருந்தனர். அங்குள்ள ஹெனான் மாகாணம், லூயுயங் நகரில் அக்.10 அன்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சிறார்களும் ஆபத்தான நிலையில் உட்கார்ந்து அழுதுகொண்டு இருந்தனர். குழந்தைகளை தந்தை நெருங்கக்கூடாது என தாய் இந்த சம்பவத்தை செய்து இருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர், குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். மேலும், பெற்றோரையும் கடுமையாக கண்டித்தனர். இந்த விஷயம் குறித்த வீடியோ அங்குள்ள சமூக வலைத்தளமான வெய்போவில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. அதனைதொடர்ந்தே உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: குட்டி செல்லங்களை அப்படியே அள்ளிகொஞ்சனும் போலவே.. செல்லகுட்டீசின் உணவு ட்ரஸ்.!