BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய சீனா.. சுற்றுலாவுக்கு ஆப்படித்த இந்தியா..!
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா, உலகம் முழுவதையும் ஆட்டி படைத்துவிட்டது. சீனாவில் மருத்துவம் பயில சென்ற 22 ஆயிரம் இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பி வந்தனர். தற்போதைய நிலையில் இந்திய மாணவர்களை அழைத்துக்கொள்ள மத்திய அரசு கோரிக்கை வைத்தும் பலனில்லை.
இதனால் இந்திய மாணவர்கள் சீனாவில் படிப்பை தொடர இயலாமல் விழிபிதுங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பான ஐ.ஏ.டி.ஏ அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் வாயிலாக, சீன நாட்டவருக்கு வழங்கிய சுற்றுலா விசாக்கள் இனி செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு வந்த சீன சுற்றுலா பயணிகளின் விபரமும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், பூடான், மாலத்தீவு, நேபாள நாட்டை சார்ந்தவர்கள் மட்டும் இந்தியாவில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இ-விசா வைத்துள்ளவர்கள் தங்களை இந்திய குடி அல்லது இந்திய வம்சாவளி என்பதற்கான அடையாள அட்டையை கொண்டுள்ள பயணிகள் இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.