கண்ணாடி வழியே கட்டி தழுவிக்கொண்ட காதலர்கள்..! கொரானோ வைரஸ் மத்தியிலும் நெகிழ வைக்கும் காதல் காட்சி..!
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. வைரஸ் பரவ தொடங்கி 1 மாத காலம் ஆகிவிட்ட நிலையில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
மேலும், வைரஸ் தாக்குதலால் உயிர் இழந்தவர்களின் எணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை சுமார் 700க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும், 24,000க்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
-edkd6.jpeg)
சீனாவை சேர்ந்த மருத்துவர்களும், செவிலியர்களும் இரவு பகல் பாராமல் தீவிர சிகிச்சையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செவிலியர் ஒருவரை காண அவரது காதலர் மருத்துவமனைக்கு வந்தார். கொரோனா அச்சம் காரணமாக இருவரும் ஒருவருக்கு ஒருவர் நேராக சந்தித்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
இதனிடையே கண்ணாடி தடுப்புகளின் வழியே சந்திக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கண்ணாடி வழியே தனது ஜோடியை ண்ட மகிழ்வில் நெகிழ்ந்த காதலர்கள் கண்ணாடி தடுப்புகளின் வழியே முத்தமிட்ட காட்சி வெளியாகி வைரலாகிவருகிறது.
Chinese nurse working in isolation ward kisses boyfriend through glass pic.twitter.com/JElkJKHp4e
— CGTN (@CGTNOfficial) February 8, 2020