சீனா என்ற நெருப்போடு விளையாட வேண்டாம் - அமெரிக்காவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை.!

சீனா என்ற நெருப்போடு விளையாட வேண்டாம் - அமெரிக்காவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை.!


China FM Wang Yi Warning America Conversation With America FM Antony Blinken

சீன நாட்டில் உள்ள பீஜிங் நகரில், குளிர்கால ஒலிம்பிக் போட்டித்தொடர்கள் பிப். 4 ஆம் தேதி தொடங்கி பிப். 20 ஆம் தேதி முடிவடைகிறது. சீனா - தைவான் விவகாரத்தில், அமெரிக்கா தைவானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால், அமெரிக்கா - சீனா இடையே மோதல் போக்கானது நிலவி வருகிறது. 

இந்த மோதல் விவகாரத்தால் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்கா கலந்துகொள்ளாத நிலையில், கனடாவும் பீஜிங் ஒலிம்பிக்கை புறக்கணிப்பதாக அறிவித்தது. அதனைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியா உட்பட அமெரிக்காவின் பல்வேறு நட்பு நாடுகள் சீனாவின் ஒலிம்பிக்கை புறக்கணித்தது. 

America

சீனாவில் நடைபெறும் மனித உரிமை மீறலால், குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிப்போம் என அமெரிக்கா தெரிவித்து இருந்தது. ஆனால், பீஜிங் ஒலிம்பிக்கை புறக்கணிக்கும் நாடுகள் கடுமையான பின் விளைவை சந்திக்க வேண்டியிருக்கும் என அமெரிக்கா எச்சரித்து இருக்கிறது. 

இந்நிலையில், அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிலிங்கனிடம் பேசிய சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, "பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவின் தலையீடை நிறுத்த வேண்டும். தைவானின் விவகாரத்தில் நெருப்போடு விளையாடுவதை தவிருங்கள். சீனாவிற்கு எதிரான வட்டத்தை நிறுத்துங்கள்" என்று தெரிவித்துள்ளார்.