மருத்துவர்களின் உடல் திடீரென கருப்பாக மாறிய சம்பவம்.! அலறிய மருத்துவர்கள்..! பதற வைக்கும் காரணம்.!
மருத்துவர்களின் உடல் திடீரென கருப்பாக மாறிய சம்பவம்.! அலறிய மருத்துவர்கள்..! பதற வைக்கும் காரணம்.!

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த சீனாவை சேர்ந்த இரண்டு மருத்துவர்களின் உடல் திடீரென கருப்பாக மாறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. உலகளவில் இதுவரை 2,565,299 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதுவரை 177,775 பேர் உயிர் இழந்துள்ளனர்.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவில் இருந்து மீள பெரும் முயற்சி செய்துவருகிறது. இந்நிலையில், யி ஃபேன் மற்றும் ஹு வீஃபெங் என்ற இரண்டு சீன மருத்துவர்கள் கொரோனாவால் தாக்கப்பட்டு கடந்த ஜனவரி 18ம் தேதி இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து கடந்த ஜனவரி முதல் இவர்கள் இருவருக்கும் சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது. இதனிடையே இருவரின் உடல்நிலையும் மிக மோசமானதால் இருவரும் அவசர பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை நடைபெற்றது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக இரண்டு மருத்துவர்களின் உடல் நிறம் கருப்பாக மாறியுள்ளது.
உடனே இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், கொரோனா வைரஸ் இருவரின் கல்லீரலையும் கடுமையாக தாக்கியுள்ளதால், கல்லீரல் மோசமடைந்து அவர்களின் நிறம் கருப்பாக மாறியுள்ளதாக மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.