என்னை விட்டுவிடுங்கள்..! கதறி அழும் சீன மருத்துவர்..! வைரலாகும் வீடியோ..!



China doctor cries who treated corono affected patients

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவி வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. பாம்பு சூப்பில் இருந்து பரவியதாக கூறப்படும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் இதுவரை 300 கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.

வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த சீனா அரசாங்கமும் சீனா மருத்துவர்களும் இரவு பகலாக கடினமாக உழைத்துவருகின்றனர். இந்நிலையில் சீன மருத்துவர் ஒருவர் கதறி அழும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Corono virus

தன்னால் இனி முடியாது என்றும், இங்கு போதுமான வசதிகள் இல்லை என்றபடியும் தனது கைகளில் டிஷு வைத்துக்கொண்டு தேம்பி தேம்பி அழுகிறார் அந்த பெண் பெண் மருத்துவர். சக மருத்துவர்கள் அவருக்கு ஆறுதல் கூற, சிலர் தங்கள் வேலையை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.