மனிதர்களை போல் துணி துவைக்கும் குரங்கு! மில்லியன் பேரை வியக்க வைத்த காட்சி!

மனிதர்களை போல் துணி துவைக்கும் குரங்கு! மில்லியன் பேரை வியக்க வைத்த காட்சி!


chimpanzee monkey washing cloths video goes viral

பொதுவாக மனிதர்கள் குரங்கில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு சாட்சியாக குரங்குகளும் சில சமயங்களில் மனிதர்களை போல் புத்திசாலித்தனமாக நடந்துகொள்கிறது. இந்த வீடியோ காட்சியில் ஒரு சிம்பான்சி குரங்கு மனிதர்களை போல் துணி துவைக்கும் காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

சீனாவில் இருக்கும் மிருகக்காட்சி சாலையில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. குறிப்பிட்ட மிருகக்காட்சி சாலையில் இருக்கும் அந்த சிம்பான்சி குரங்கின் பராமரிப்பாளர் துணி துவைப்பதை இந்த குரங்கு பார்த்திருக்க கூடும் என்றும் அதை பார்த்துவிட்டு இந்த குரங்கும் அப்படியே செய்வதாக கூறப்படுகிறது.

monkey

மனிதர்களைப்போலவே துணிக்கு சோப்பு போட்டு கைகளால் துவைத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது இந்த குரங்கு. குரங்கை பார்க்க சென்ற பார்வையாளர் ஒருவர் இந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட தற்போது அந்த வீடியோ வைரலாகிவருகிறது.