ஹெலிகாப்டர் விபத்தில் சிலி முன்னாள் அதிபர் செபாஸ்டின் உட்பட நான்கு பேர் பலி..!

தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டின் முன்னாள் அதிபர் பணியாற்றியவர் செபஸ்டியன் பினேரா (வயது 74). சிலி அரசியலில் முக்கிய புள்ளியாக வலம்வந்த செபஸ்டியன், நேற்று ஹெலிகாப்டர் ஒன்றில் தனது பாதுகாவலர் உட்பட 4 பேருடன் பயணம் செய்துகொண்டு இருந்தார்.
இந்நிலையில், ஹெலிகாப்டர் திடீரென விபத்திற்குள்ளாகவே, அதில் பயணம் செய்த 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் செபஸ்டியனின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவல் அவரின் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
11 மார்ச் 2018 முதல் 11 மார்ச் 2022, 11 மார்ச் 2010 முதல் 11 மார்ச் 2014 ஆகிய காலங்களில் இவர் சிலியின் அதிபராக பணியாற்றி இருக்கிறார்.