
Summary:
Chances to get pregnant while bathing in swimming pool
நீச்சல் குளத்தில் இருக்கும் தண்ணீர் மூலமாக கூட பெண்கள் கர்ப்பமாக முடியும் என குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியா நாட்டில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியாக உள்ள சிட்டி ஹிக்மாவாட்டே என்ற பெண் அதிகாரிதான் இந்த கருத்தை கூறியுள்ளார். பெண்கள் கர்பமாவது குறித்து பேசிய அவர், ஒரு ஆண் நீச்சல் குளத்தில் தனது விந்தணுவை வெளியேற்றினால், தண்ணீர் மூலம் அந்த விந்தணு பெண்களின் கர்ப்பப்பைக்கு சென்று குழந்தையாக உருவாக வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார்.
ஹிக்மாவாட்டே கூறிய கருத்து அறிவியல் பூர்வமாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பதால் அவர் கூறிய கருத்து பல்வேறு கேலி கிண்டல்களுக்கு ஆலானதோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement